மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு விரோதமாகவும் செயல்படுவதாக கூறி திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் காந்திமார்க்கெட் மரக்கடை எம்.ஜி.ஆர்.சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:- இந்துக்களுக்கு எதிரான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. தமிழக அரசு போன்ற மக்கள் விரோத அரசு இந்தியாவிலேயே கிடையாது. ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சுவர் இடிந்து விழுந்துள்ளது பற்றி கேட்டால் அலட்சியமாக பதில்அளிக்கிறார்கள். இந்துசமயஅறநிலையத்துறையை தூக்கி எறியாவிட்டால் தற்போது ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்தது தான் அனைத்து கோவில்களுக்கும் நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பஸ் போக்குவரத்து நிறுத்தம்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். காந்திமார்க்கெட் வழியாக நேற்று மாலை பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.