திருப்பூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: மாநில தலைவர் உள்பட 650 பேர் கைது
தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் உள்பட 650 பேர் கைது.
திருப்பூர்,
விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி சார்பில் இந்து மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது பல்வேறு பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்த தி.மு.க. அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 650 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
Related Tags :
Next Story