கழுகுமலையில் இந்து முன்னணி பயிற்சி முகாம்


கழுகுமலையில் இந்து முன்னணி பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் இந்து முன்னணி பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்துமுன்னணி சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கழுகுமலை நகர தலைவர் வனிதாராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கழுகுமலை பேரூராட்சி மன்றத் தலைவர் அருணா சுப்பிரமணியன் மற்றும் பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர். மதுரைவாசிகள் டிரஸ்ட் தலைவர் செந்தில்குமார் மற்றும் மாநில துணை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முகாமில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கழுகுமலை நகர தலைவர் வனிதாராஜா செய்திருந்தார்.


Next Story