இந்து முன்னணி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்


இந்து முன்னணி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
x

இந்து முன்னணி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கரூர்

அரவக்குறிச்சியில் இந்து முன்னணி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருகிற ஜூலை 13-ந்தேதி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மேற்கொண்டு இருக்கும் இந்து உரிமை மீட்பு மாநிலம் தழுவிய பிரச்சார யாத்திரை கரூர் வரும் பொழுது அரவக்குறிச்சி ஒன்றியதில் இருந்து 100 வாகனங்களில் செல்வது, அரவக்குறிச்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சுகாதாரத்துறை வழிகாட்டுதலை பின்பற்றி ஆடுகளை அறுக்க கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்து முன்னணி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story