கூடலூரில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்


கூடலூரில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
x

கூடலூரில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

நீலகிரி

கூடலூர்

இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் கூடலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் வேலுச்சாமி, பொதுச்செயலாளர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகர தலைவர் குருசாமி வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கோவில் நிகழ்ச்சிக்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வது. இந்து முன்னணி பயிற்சி முகாம் அடுத்த மாதம் நடத்துவது, வாரந்தோறும் அனைத்து கிளைகளிலும் பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட அளவிலான இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story