தாலுகா அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை


தாலுகா அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
x

தாலுகா அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் கோவில நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்து முன்னணியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு கடைகள்

ஆரணி காந்தி ரோட்டில் அண்ணா சிலை அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இவற்றை அகற்றக்கோரி கோவில் நிர்வாகிகள் சார்பாக ஆரணி நகர போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பல்வேறு துைணறயினரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவில் சார்பில் கோர்ட்டிலும் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதன்பிறகு உத்தரவை காண்பித்து ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே மாசி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. இந்த நிலையில் கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகளான மாவட்ட செயலாளர் தாமோதரன், நகரத் தலைவர் நாகராஜ், இளைஞர் அணி நிர்வாகி விக்னேஷ் மற்றும் கோவில் நிர்வாகிகள் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்த பலருடன் சென்று ஆரணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தரையில் அமர்ந்து போராட்டம்

அப்போது தாசில்தாரை சந்திக்க அவர்கள் செல்ல முயன்றபோது ஆரணி டவுன் போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தனர். இதனையடுத்து தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் மண்டல துணை தாசில்தார் சங்கீதா அங்கு வந்து பச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட செய்ய முயன்றார். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. பின்னர் செல்போன் மூலமாக தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்

தாசில்தார் வெளியே சென்று இருப்பதாகவும் அவர் வந்ததும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஆரணி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story