நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை தச்சநல்லூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் சுடலை மற்றும் தச்சநல்லூர் ராதா தாமோதரன் வழிபாட்டு மையத்தினர் 25-க்கும் மேற்பட்டோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பஜனை பாடியபடி மனு கொடுத்தனர். அந்த மனுவில், திராவிடர் கழகம் சார்பில் தச்சநல்லூர் சந்திமறித்த அம்மன் கோவில் பகுதியில் வருகிற 24-ந் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேச உள்ளார். ஏற்கனவே பல்வேறு கூட்டங்களில் கி.வீரமணி இந்து தெய்வங்களை பற்றி இழிவாக பேசியுள்ளார். கிருஷ்ணரை பற்றியும் அவதூறாக பேசியுள்ளார். இந்த நிலையில் அவர் தச்சநல்லூரில் பேசும்போது இழிவாக பேச வாய்ப்புள்ளது. இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது" என்று கூறியுள்ளனர்.


Next Story