இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்; 107 பேர் கைது


இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்; 107 பேர் கைது
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் நேற்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட இந்து முன்னணி சார்பில் வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

107 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்து முன்னணி நெல்லை கோட்ட தலைவர் தங்க மனோகர், தென்காசி மாவட்ட பா.ஜனதா பார்வையாளர் மகாராஜன், நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி பொதுசெயலாளர் பிரம்மநாயகம், நெல்லை புறநகர் மாவட்ட பொதுசெயலாளர் நாகராஜன், மாவட்ட பொதுசெயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அனுமதியின்றி நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் தலைமையான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 107 பேரை கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

முன்னதாக கைது செய்யப்பட்டவர்கள் வேனில் ஏற்றப்பட்ட போது சிலர் உதயநிதி ஸ்டாலின் படத்தை செருப்பால் அடித்தும், கிழித்தும் வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story