இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

திசையன்விளையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. இந்துக்களை அவதூறாக பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று மாலை திசையன்விளை காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ராதாபுரம் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். திசையன்விளை நகரத்தலைவர் ஜெயசீலன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் விக்னேஷ், கோட்ட தலைவர் தங்க மனோகர், நாங்குநேரி ஒன்றிய தலைவர் ஆர்தர், நகர பொருளாளர் செந்தில், ராதாபுரம் பா.ஜனதா ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story