ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசியதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் வி.கார்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஜி.கே.ரவி முன்னிலை வகித்தார். இந்து இளைஞர் முன்னணி அனீஸ் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் பிரபாகரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்
Related Tags :
Next Story