தகராறில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது


தகராறில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது
x

தகராறில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

திருநாகேஸ்வரம் மணல்மேட்டு தெருவை சேர்ந்த கணேசன் மகன் ஹரி (வயது30). இந்து மக்கள் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றிய இளைஞரணி தலைவர். அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் மணிகண்டன் (32). இவர்கள் உள்பட 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் அலுவலகத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கோவில் உதவி ஆணையர் உமாதேவி திருநீலக்குடி போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் நேற்று திருநீலக்குடி போலீசார் ஹரி மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.



Next Story