மேலூர் அருகேஇந்து-முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய மத நல்லிணக்க பொங்கல் விழா


மேலூர் அருகேஇந்து-முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய மத நல்லிணக்க பொங்கல் விழா
x

மேலூர் அருகே இந்து-முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய மதநல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது.

மதுரை

மேலூர்

மேலூர் அருகே இந்து-முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய மதநல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது.

பொங்கல் விழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சி நான்கு வழி சாலையில் அமைந்துள்ளது தும்பைபட்டி. இங்கு பழமையான வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள், இந்துக்கள் இணைந்து ஆண்டுதோறும் மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு விழா வழக்கம்போல மத நல்லிணக்க பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, பொதுமக்களிடமும் வசூல் செய்த பணத்தில் அம்மன் மற்றும் கோவில் காளைக்கு அணிவிப்பதற்கான புத்தாடைகள் வாங்கப்பட்டன. இவற்றை ஜவுளி பொட்டலங்களாக சுற்றப்பட்டு அதன் மீது செவ்வந்தி மாலைகள் சுற்றி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் சுமந்தபடி ஊர் மந்தைக்கு கொண்டு வந்தனர். அங்கு பெரியவர்கள் முன்னிலையில் சாமி கும்பிட்டனர்.

மஞ்சுவிரட்டு

அதன் பின்னர் கிராமத்தினருடன் வீரகாளியம்மன் கோவிலுக்கு எடுத்து சென்று பாரம்பரிய வழக்கப்படி வழிபாடு நடைபெற்றது. முஸ்லிம்கள் கோவிலில் வழிபட்டனர். இதைதொடர்ந்து கோவில் முன்பாக கட்டி வைக்கப்பட்டிருந்த கோவில் காளைக்கு மற்றும் அம்மனுக்கு புத்தாடைகள் அணிவித்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக மத நல்லிணக்க பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

முஸ்லிம்களுடன் கிராம மக்கள் இணைந்து நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story