போலீஸ் நிலையத்தை இந்து அமைப்பினர் முற்றுகை


போலீஸ் நிலையத்தை இந்து அமைப்பினர் முற்றுகை
x

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தை இந்து அமைப்பினர் முற்றுகை

கன்னியாகுமரி

குழித்துறை,

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் சமய மாநாட்டிற்கு தடை விதித்த இந்து அறநிலையத்துறையை கண்டித்து மார்த்தாண்டத்தில் இந்து அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பா.ஜனதாவின் இந்த செயலை கண்டித்தும், குமரியில் அவதூறு பரப்பி மத கலவரத்தை தூண்டும் செயலில் ஈடுபட்டுள்ள குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க.வினர் மார்த்தாண்டம் போலீசில் ஒரு மனு கொடுத்தனர்.

இந்தநிலையில் இந்து அமைப்பினர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மனோதங்கராஜிக்கு எதிராக அவர்கள் பிரபின் என்பவர் பெயரில் போலீசில் மனு கொடுத்தனர்.

அப்போது களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் தலைவர் தேவதாஸ், மருதங்கோடு முன்னாள் ஊராட்சி தலைவர் சேகர், பா. ஜனதா விவசாய அணியை சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

போலீசில் கொடுத்த மனுவில், அமைச்சர் மனோ தங்கராஜ் தொடர்ந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் இந்து ஆகம விதிக்கு எதிராக செயல்படுகிறார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் சமய மாநாட்டை அமைச்சர் மனோ தங்கராஜ் தலையிட்டு வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் குமரி மாவட்டத்தில் மத கலவரம் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது. எனவே அமைச்சர் மீதும் அதற்கு துணை போகும் நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


Next Story