இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்
நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் நேற்று ஒலி எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் நேற்று ஒலி எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் பிரதீப் முன்னிலை வகித்தார்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். பட்டியல் இன சமுதாய மக்களின் உரிமைகளை பறிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக கவர்னருக்கு அனுப்புவதற்காக தபால் நிலையம் உள்ளே சென்றனர். அப்போது நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நாகை ஒன்றிய தலைவர் குமரவேல், மாவட்ட ஆன்மிக அணி அமைப்பாளர் ராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் வீரையன் உள்பட இந்து மக்கள் கட்சியினர் 5 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.