இந்து மக்கள் கட்சி நிர்வாகி மோட்டார் சைக்கிள் எரிப்பு


இந்து மக்கள் கட்சி நிர்வாகி மோட்டார் சைக்கிள் எரிப்பு
x

திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் குமரன்திருநகரை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 36). இவர் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி துணை தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது அவருடைய மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமாகி இருந்தது.

நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து மோகன்குமார் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நேரத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story