பெண்ணை தாக்கிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது


பெண்ணை தாக்கிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது
x

பெண்ணை தாக்கிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

பொன்மலைப்பட்டி, மே.31-

பெண்ணை தாக்கிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

இந்து மக்கள் கட்சி செயலாளர்

திருச்சி பொன்மலை அருகே மலையப்ப நகர் காந்திஜி தெரு ஆயில் மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ராதிகா (வயது 36). ரவி தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்ப்பதற்காக கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்த மெக்கானிக் கடை நடத்தி வரும் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமாரிடம் கொடுத்தார்.

ஆனால் நீண்ட நாட்களாகியும் மோட்டார் சைக்கிளை பழுது பார்த்து தரவில்லை. இதனால் ரவி, தனது மனைவி ராதிகாவுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை ராஜ்குமாரிடம் கேட்டுள்ளனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் ராதிகாவை தாக்கினாராம். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமாரை கைது செய்தனர்.


Next Story