திருச்செந்தூரில் இந்துமக்கள் கட்சி கூட்டம்


திருச்செந்தூரில் இந்துமக்கள் கட்சி கூட்டம்
x

திருச்செந்தூரில் இந்துமக்கள் கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ரெயிலடி ஆனந்தவிநாயகர் கோவில் வளாகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, திருச்செந்தூர் அனுமன் சேனா ஒன்றிய தலைவர் தங்கராஜ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முருகபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்

சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் ரவிகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், திருச்செந்தூர் ஒன்றியத்தில் 108 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசகர் முத்துகுமார், திருச்செந்தூர் ஒன்றிய துணை தலைவர் ராஜேஷ், ஒன்றிய அமைப்பாளர் பால்ராஜ், தெற்கு மாவட்ட இணை செயலாளர் குமார், காயாமொழி கிளை தலைவர் செல்வகுமார், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஆசீர்துரை, காயாமொழி வட்டார அமைப்பாளர் சக்திகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story