இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
x

மருத்துவ பணிகள் இணை இயக்குனரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாநில அமைப்பாளர் செல்வம் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட அமைப்பாளர் ரவி, மாவட்ட செயலாளர் சபரிமலைராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பொ.மாரிமுத்துவை கண்டித்தும், அவரை பணியிலிருந்து நீக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநில செயலாளர்கள் ரமேஷ், கமலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story