இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல்; 18 பேர் கைது
நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அதில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்
திருநெல்வேலி
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற அந்த கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே இந்து மக்கள் கட்சியினர் தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன் தலைமையில், மாநில துணை தலைவர் முத்து அரங்கசாமி, மாநில செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்ளிட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story