டிரைவரை தாக்கி லாரி கடத்தல்; 2 பேர் கைது


டிரைவரை தாக்கி லாரி கடத்தல்; 2 பேர் கைது
x

திசையன்விளை அருகே டிரைவரை தாக்கி லாரியை கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை மணலிவிளை சாமியார் தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 52) இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். நேற்று இவரது செல்போனில் பேசிய நபர், நெல்லைக்கு சென்று சாமான்களை ஏற்றி வர வேண்டும் என கூறி அழைத்துள்ளார். உடனே மாடசாமியும், கிளினர் பெரியசாமியும் லாரியில் சென்றுள்ளனர். அவர்கள் திசையன்விளை-நாங்குநேரி ரோடு ஐ.என்.எஸ்.கடற்படை அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பல் லாரியை வழிமறித்து மாடசாமியை தாக்கியது. ேமலும் பெரியதுரையை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு, லாரியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாடசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் களக்காட்டை சேர்ந்த சங்கர் (வயது 45) பெரியநாடார்குடியிருப்பு பெருமாள் மகன் துரை (25) ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து லாரி மீட்கப்பட்டது. மேலும் 4 பேரை ேதடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், மாடசாமி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் லாரிக்கு டீசல் போட்ட வகையில் ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் கொடுக்க வேண்டியது இருந்ததாகவும், அதை அவர் கொடுக்காததால் இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்து உள்ளது.


Next Story