புகையிலை பொருட்களை பதுக்கியமளிகை கடைக்காரர்கள் 2 பேர் கைது
புகையிலை பொருட்களை பதுக்கிய மளிகை கடைக்காரர்கள் 2 பேரை கைது செய்தனா்
டி.என்.பாளையம் அடுத்த வாணிப்புத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாணிப்புத்தூர் மாரியம்மன் கோவில் வீதியில் மளிகைக்கடை நடத்தி வரும் ஈஸ்வரன் (வயது 59) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் சாக்கு பையில் கட்டி பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வாணிப்புத்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சக்திவேல் (60) என்பவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சாக்கு பையில் சக்திவேல் புகையிலை பொருட்களை கட்டி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 1500 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.