கோவில்பட்டியில் ஆக்கி போட்டி
கோவில்பட்டியில் ஆக்கி போட்டி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் 12 வயதுக்கு உட்பட்டோர் ஆக்கிப்போட்டி தொடங்கியது.
போட்டியை தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழகச் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தொடங்கி வைத்தார்.
முதல் போட்டியில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி அணியும், இலுப்பை யூரணி அணியும் மோதியது. இதில் ராஜீவ் காந்தி அணி 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி அணியும், தெற்கு திட்டங்குளம் ஆக்கி அணியும் மோதியது. இதில் பாண்டவர்மங்கலம் ஆக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
3-வது போட்டியில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி அணியும், பாரதி ஆக்கி அணியும் மோதியது. இதில் ராஜீவ் காந்தி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி அணியும், இலுப்பை யூரணிஅணியும் மோதியது. இதில் பாண்டவர் மங்கலம் அணி 12- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.