தேசிய கொடி ஏற்றுவதில் காங்கிரசார் இடையே தள்ளு முள்ளு; சட்டை கிழிப்பு


தேசிய கொடி ஏற்றுவதில்   காங்கிரசார் இடையே தள்ளு முள்ளு; சட்டை கிழிப்பு
x

போடியில் தேசிய கொடி ஏற்றுவதில் காங்கிரசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது

தேனி

சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி தேனி மாவட்டம் போடியில் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் முபாரக் மந்திரி தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் பேண்டு வாத்தியங்களுடன் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னனர் தேவர் சிலை, இந்திரா காந்தி சிலை மற்றும் வள்ளுவர் சிலை அருகே உள்ள கொடி கம்பங்களில் தேசிய கொடி ஏற்றினர்.

இதையடுத்து பெருமாள் கோவில் எதிரே உள்ள கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற வந்தனர். அப்போது காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் தர்மர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரும் கொடி ஏற்ற அங்கு வந்தனர். இதற்கிடையே கொடி ஏற்றுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் சட்டை கிழிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story