ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வருகிற 27-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம், 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story