புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா
சாத்தான்குளம் அருகே வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழாவையொட்டி மதுரை பங்குதந்தை இருதயராஜ் தலைமையில் திருப்பலி, மாலை ஆராதனை நடைபெற்றது. கடக்குளம் பங்குதந்தை அன்புசெல்வன் மறையுரை வழங்கினார். குறுக்குசாலை அருள்தந்தை மரியதுரை சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அன்னையின் தேர்ப்பவனி நடைபெற்றது. 10-ம் நாள் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் நெல்சன்பால்ராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி, திருமுழுக்கு, புதுநன்மை வழங்குதல், மறையுரை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தேர்ப்பவனி நடைபெற்றது. மாலை 7 மணிக்கு மேரிஇம்மாகுலேட் பள்ளி முதல்வர் அந்தோணிபேட்ரிக் விஜயன், குறுக்குச்சாலை அருள்தந்தை மரியதுரை ஆகியோர் தலைமையில் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. தொடர்ந்து கொடியிறக்கம், விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சிதம்பராபுரம் பங்குத்தந்தை இருதயசாமி தலைமையில் வேலாயுதபுரம் பங்குமக்கள், செய்திருந்தனர்.