புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழா
முகிழ்தகம் வெள்ளாளக்கோட்டை புனித வனத்து சின்னப்பர் ஆலயம் 32-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா முகிழ்தகம் வெள்ளாளக்கோட்டை புனித வனத்து சின்னப்பர் ஆலயம் 32-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் நவநாள் திருப்பலி, மறையுறை நிகழ்த்தப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை தொண்டி பங்கு தந்தை சவரி முத்து நிறைவேற்றினார்.இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இறைமக்கள் திருப்பலியில் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர். இதனையொட்டி அன்னதானம், வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பக்தர்கள் தானியங்கள் காய்கறிகள் போன்ற காணிக்கைகளை ஆலயத்தில் செலுத்தினர். இதில் அமலவை அருட் சகோதரிகள், வெள்ளாளக் கோட்டை கிராம மக்கள், புனித வனத்து சின்னப்பர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story