புனித பனிமய மாதா ஆலய பெருவிழா


புனித பனிமய மாதா ஆலய பெருவிழா
x

புனித பனிமய மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற புனித பனிமய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருவிழாவையொட்டி பங்கு தந்தையும், பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குருவான ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து கூட்டு பாடல் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக தேர் பவனியாக செல்லக்கூடிய முக்கிய வீதிகளில் கொடி ஊர்வலம் நடந்தது. திருப்பலி மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகளில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து விழா நாட்களில் தினமும் மாலையில் பல்வேறு ஆலயங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 4-ந்தேதி நடக்கிறது. 5-ந்தேதி பெருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story