சிறப்பூர் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை
சிறப்பூர் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சிறப்பூர் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
முதல் நாள் முதல் நாள் நடைபெற்ற வாலிபர் பண்டிகையில் ஐடா செல்வன் தேவ செய்தி வழங்கினார். ஆயத்த ஆராதனை, நற்செய்திக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் சேவூர் இந்திய தேவ சபை பாஸ்டர் சுரேஷ் தேவசெய்தி வழங்கினார். 2-ஆம் நாள் சிற்றாலத்தில் சிறப்பு ஆராதனை, பிரதிஷ்டை, திருவிருந்து ஆராதனையில் சேகரத் தலைவர் செல்வன் மகாராஜா ஆராதனை நடத்தினார். மாலையில் ஞானஸ்நான ஆராதனை, இரவு நடந்த நற்செய்தி கூட்டத்தில் சேவூர் இந்திய தேவசபை சுரேஷ் தேவ செய்தி வழங்கினார். 3-ஆம்நாள் காலையில் அசன விருந்து ஆயத்த ஜெபம், திருமறை தேர்வும், மாலையில் அசனப்பண்டிகையும் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார மக்கள் பங்கேற்றனர். 4-ஆம் நாள் மதியம் அனைத்து வியாபாரிகள் சார்பில் 25-வது விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.