புனித விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழா


புனித விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழா
x
தினத்தந்தி 8 Aug 2023 1:30 AM IST (Updated: 8 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மேற்குமரியநாதபுரம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய 109-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்குமரியநாதபுரம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய 109-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று மாலை கொடி அர்ச்சிப்பு செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் குட்டத்துஆவரம்பட்டி பங்குதந்தை ஜான் நெப்போலியன் கொடியேற்ற சிறப்பு திருப்பலி நடத்தினார். அதைதொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் வாணவேடிக்கை முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு மின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. 15-ந்தேதி காலை பெருவிழா சிறப்பு திருப்பலியும், தூய விண்ணேற்பு அன்னையின் பகல்தேர் பவனியும் நடக்கிறது. பின்னர் அன்னதானம் மற்றும் நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மேற்குமரியநாதபுரம் ஊர் கவுரவ தலைவர் ஜான்பீட்டர், தலைவர் ஜான்போஸ்கோ, செயலாளர் அலெக்சாண்டர், துணைசெயலாளர்கள் ராபர்ட் எட்வின், ஜெயசீலன், பங்குதந்தை ஜெயசீலன் மற்றும் இளைஞர், மகளிர் அமைப்பினர் செய்திருந்தனர்.


Next Story