பூலித்தேவன் உருவப்படத்திற்கு மரியாதை
அம்பையில் பூலித்தேவன் உருவப்படத்திற்கு மரியாதை
திருநெல்வேலி
அம்பை:
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவையொட்டி, மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் துரைபாண்டியன் ஏற்பாட்டில், அம்பை ஆர்ச் அருகில் அலங்கரிக்கப்பட்ட பூலித்தேவன் உருவப்படத்துக்கு பல்வேறு கட்சியினரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அம்பை நகரசபை தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான கே.கே.சி.பிரபாகரன், அரசு வக்கீல் காந்திமதிநாதன், காங்கிரஸ் கட்சி அந்தோணிசாமி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சுலைமான், முகமது ஜலில், நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிர்வாகி தங்கமாரி, மூ.மு.க. நிர்வாகிகள் பேச்சிமுத்து, ரவி பாண்டியன், பாஸ்கர், தி.மு.க. வக்கீல் சுவாமிநாதன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story