பழங்குடியினருக்கு வீடுகள் கட்ட ஆணை-கலெக்டர் சாந்தி வழங்கினார்


பழங்குடியினருக்கு வீடுகள் கட்ட ஆணை-கலெக்டர் சாந்தி வழங்கினார்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் 15 பழங்குடியினருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 628 மனுக்கள் அளிக்கப்பட்டன. உரிய ஆய்வு நடத்தி இந்த மனுக்களுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பென்னாகரம், பாலக்கோடு ஒன்றியங்களில் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் மூலம் 15 பழங்குடியினருக்கு ரூ.74 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் இலவச வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

சத்துணவு அமைப்பாளர்

இதேபோல் கருணை அடிப்படையில் ஒருவருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நசீர் இக்பால், மணிமேகலை, உதவி திட்ட அலுவலர் தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, மரியதாஸ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story