வீடு புகுந்து திருடியவர் கைது


வீடு புகுந்து திருடியவர் கைது
x

உடன்குடியில் வீடுபுகுந்து ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி கிறிஸ்டியாநகரம் பகுதியை சேர்ந்த மோசஸ் மகன் துரைசிங் (வயது 32). இவரது வீடு புகுந்து உடன்குடி வைத்தியலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் சண்முகவேல் (38) என்பவர் ஆயிரம் ரூபாயை திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர்.


Next Story