வீடு புகுந்து 7 பவுன் நகை-பணம் திருட்டு


வீடு புகுந்து 7 பவுன் நகை-பணம் திருட்டு
x

வீடு புகுந்து 7 பவுன் நகை-பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி

வீடு புகுந்து 7 பவுன் நகை-பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருட்டு

திருச்சி காந்தி மார்க்கெட் மணிமண்டப சாலை கோபால கிருஷ்ணபிள்ளை தெருவை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 51). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் தூங்க சென்றுள்ளார். அதிகாலை வீட்டிற்குள் இருந்து சத்தம் வந்தது. அசாருதீன் சென்று பார்த்துள்ளார். அப்போது ஒரு மர்ம நபர் வீட்டில் வென்டிலேட்டர் வழியாக தப்பித்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டில் இருந்த பீரோவை பார்த்தபோது அதில் ரூ.26 ஆயிரம் மற்றும் 2½ பவுன் கம்மல், 1½ பவுன் வளையல், 1 பவுன் சங்கிலி, 2 பவுன் தங்க மோதிரம் என 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story