வீடு புகுந்து ரூ.20 ஆயிரம், 3 கைக்கெடிகாரங்கள் திருட்டு


வீடு புகுந்து ரூ.20 ஆயிரம், 3 கைக்கெடிகாரங்கள் திருட்டு
x

வீடு புகுந்து ரூ.20 ஆயிரம், 3 கைக்கெடிகாரங்கள் திருட்டுபோனது.

திருச்சி

திருச்சி:

திருச்சி பீமநகர் கண்டித்தெருவை சேர்ந்தவர் பீர்முகமது(வயது 48). இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும், அந்த வீட்டில் பீரோக்கள் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த 7-ந் தேதி வேலை முடிந்தபின்னர் பீர்முகமது உள்பட அனைவரும் சென்று விட்டனர். இதையடுத்து நள்ளிரவுக்கு மேல் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் 3 கைக்ெகடிகாரங்களை திருடி சென்றுள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற பீர்முகமது, வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பணம் மற்றும் கைக்கெடிகாரங்கள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாலக்கரை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story