எருமப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்


எருமப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்
x

எருமப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றபட்டது.

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் ஊராட்சி கஸ்தூரிபட்டியில் மயானம் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். மேலும் பாதையை ஆக்கிரமித்து ஒரு வீடும் கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், துணை தாசில்தார் பாரதிராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் பாலகுமார் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி எருமப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story