வீட்டில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்க வேண்டும்


வீட்டில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்க வேண்டும்
x
தினத்தந்தி 31 July 2023 1:15 AM IST (Updated: 31 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி பகுதியில் வீட்டில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

பழனி வனப்பகுதியில் உள்ள யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் உயிரினங்களை காக்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அழியும் நிலையில் உள்ள பறவைகளை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது பழனி பகுதியில் வீட்டில் யாரும் கிளிகளை வளர்க்க கூடாது எனவும், அவ்வாறு வளர்க்கும் கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. எனவே அவற்றை வீட்டில் வளர்ப்பது தண்டனைக்கு உரிய குற்றமாகும். எனவே பழனி பகுதியில் யாரேனும் கிளிகளை வீட்டில் வளர்த்தால் அவற்றை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் வனஉயிரின சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Related Tags :
Next Story