ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா
ஊர்க்காவல் கடை பயிற்சி நிறைவு விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலி பணியிடங்களாக இருந்த 16 ஊர் காவல்படையினர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஊர் காவல் படையினருக்கு (பெண்கள்-2 ஆண்கள்-14) கடந்த 45 நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை அருகே பாச்சல் ஊராட்சி பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு ஊர் காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார்.
விழாவில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஊர் காவல் படை தளபதி வெங்கடேசன், துணை தளபதி சத்திய பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.