மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கடன் முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கடன் முகாம்
x

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கடன் முகாம் நாளை நடைபெற உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை:

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்கடன் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி பயனாளிகள் தேர்வு முகாம் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. வீட்டுக்கடன் வசதி தேவைப்படும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டை (அசல், நகல்) ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு (அசல், நகல்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு வீட்டுக்கடன் பெற்று பயன் அடையலாம். இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.




Next Story