மதுரை வந்தடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா..!


மதுரை வந்தடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா..!
x
தினத்தந்தி 28 July 2023 4:38 PM IST (Updated: 28 July 2023 5:16 PM IST)
t-max-icont-min-icon

ராமேஸ்வரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடைபயணத்தை அமித்ஷா இன்று மாலை தொடங்கிவைக்கிறார்.


மதுரை,

"என் மண் என் மக்கள்" என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மாலை தொடங்கிவைக்கிறார்.இந்த நிலையில் அமித்ஷா தற்போது மதுரை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் மதுரை வந்தடைந்தார்

மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்லும் அமித்ஷா அண்ணாமலை நடைப்பயணத்தை தொடங்கி வைக்கிறார் . பின்னர் விழாவில் அமித்ஷா உரையாற்றுகிறார்.


Next Story