இல்லம் தேடி கல்வித்திட்ட பயிற்றுனர்களுக்கு பயிற்சி
இல்லம் தேடி கல்வித்திட்ட பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி
பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தொடக்க நிலை மாணவர்களுக்கு கற்பிக்கின்ற தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ஆங்கில எழுத்துக்களின் முறையான ஒலி உச்சரிப்பை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஆங்கிலம் வாசிக்க கற்றுத்தருவதற்கான பயிற்சி, திருச்சியில் 5 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது.
இதில் முதற்கட்டமாக மண்ணச்சநல்லூர் ஒன்றியம் மற்றும் திருச்சி நகரில் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் 6 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை குறுவள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் சக்திவேல்பாண்டியன், அனந்தராமன், தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story