இல்லம் தேடி கல்வி பயிற்சி முகாம்


இல்லம் தேடி கல்வி பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் இல்லம் தேடி கல்வி பயிற்சி முகாம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட இல்லம் தேடிக்கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம், பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணபாரதி பயிற்சியை தொடங்கி வைத்தார். இல்லம் தேடிக் கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் நாகஜோதி, வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரதாப் சிங், வட்டார வள மைய அலுவலர்கள் ஜெஸிலெட் மேரி, ஜெயந்தி, செல்வமீனாட்சி, அனிதா, சாந்தஜெகலெட்சுமி, கட்டுகுத்தகைபச்சேரி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா மற்றும் ஆசிரியர்கள் வசந்தகுமார், திருமலைச்செல்வி ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்று பயிற்சி அளித்தனர். பயிற்சியின் போது தன்னார்வலர்களுக்கான கையேடு மற்றும் மாணவர்களுக்கான அடைவு திறன் அட்டை தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் வட்டார வள மைய அலுவலர்கள் செய்திருந்தனர்.


Next Story