இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம்


இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம்
x

தி.மு.க. இளைஞரணி சார்பில் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். அம்பை நகர செயலாளர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் பரணி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஜான்ரபீந்தர் வரவேற்றார். அம்பாசமுத்திரம் அய்யனார் குளம் பகுதி மற்றும் மேலப்பாளையம் தெரு ஆகிய இடங்களிலும், கல்லிடைக்குறிச்சியில் நகர பஞ்சாயத்து 16, 20-வது வார்டுகளிலும் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முகாம்களில் மணிமுத்தாறு நகர செயலாளர் முத்து கணேசன், அம்பை நகர இளைஞரணியைச் சேர்ந்த தினகர், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் இசக்கி பாண்டியன், சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார், ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story