இல்லம் தேடி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி
இல்லம் தேடி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியை நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
வேலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தேடி தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்கள் சேர்த்தல் நிகழ்ச்சி குடியாத்தம் பிச்சனூர் பாரதியார் தெருவில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே. ராஜமார்த்தாண்டன் தலைமை தாங்கினார். குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ், பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் கே.ஜனார்தனன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.என்.விஜயகுமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம்.பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட தி.மு.க.செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு இல்லம் தேடி தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் த.புவியரசி, தலைமைக் கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜி. எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், சி.என்.பாபு, எம்.எஸ்.குகன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.