அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணி
வேப்பங்கனேரி ஊராட்சியில் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
ராணிப்பேட்டை
கே.வி.குப்பத்தை அடுத்த வேப்பங்கனேரி ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று, அனைவருக்கும் வீடு கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. அப்போது கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள், சிமெண்ட் ஷீட் வீடுகள், நிலைத்த தன்மையற்ற வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது பட்டா, சிட்டா, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து, ஊராட்சி மன்ற தலைவரை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த கணக்கெடுப்பின்போது ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கிராம ஊராட்சி செயலாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story