வீட்டு வசதி வாரிய வீடு, மனைகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்ய ஆன்லைனில் குலுக்கல்-ஓசூரில் நாளை நடக்கிறது
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஓசூர் வீட்டு வசதி பிரிவு தர்மபுரி மாவட்ட திட்டப்பகுதிகளில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள வீடுகள் மற்றும் மனைகள் ஆகியவற்றிற்கு கடந்த செப்டம்பர் மாதம் 5-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 3-ந் தேதி வரை பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் வீடுகள் மற்றும் மனைகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் ஆன்லைன் முறையில் குலுக்கல் நாளை (திங்கட்கிழமை) ஓசூரில் உள்ள தாசப்பா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story