தனியார் பஸ் மோதி ஓமியோபதி டாக்டர் பலி
பள்ளகொண்டா அருகே தனியார் பஸ் மோதி ஓமியோபதி டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த மேல்வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45), ஓமியோபதி டாக்டர். இவருக்கு அமுதா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவரது உறவினருக்கு திருமணம் நடைபெற உள்ளதால் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்துவிட்டு பிராமணமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த போது குடியாத்தத்தில் இருந்து ஒடுக்கத்தூரை நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஆசனம்பட்டு பகுதியை சேர்ந்த பஸ் டிரைவா் செல்வம் (42), கருங்காலி பகுதியை சேர்ந்த கண்டக்டர் குப்புசாமி பள்ளிகொண்டா போலீசில் சரணடைந்தனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.