ஹோண்டா சைன் புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம்


ஹோண்டா சைன் புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம்
x

ஹோண்டா சைன் புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கரூர்

100 வருட பாரம்பரியமிக்க பி.எம். சொர்ணம் பிள்ளை சன்ஸ் சார்பு நிறுவனமான கரூர் சக்ரா ஹோண்டாவின் சார்பில் தாந்தோணிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஹோண்டா சைன் புதிய மோட்டார் சைக்கிள் அறிமுக விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சக்ரா ஹோண்டா உரிமையாளர்கள் பி.எஸ்.முருகேசன் மற்றும் வி.சுப்பிரமணி கலந்து கொண்டு புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தினர்.

விழாவில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இருசக்கர வாகன மெக்கானிக் உரிமையாளர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் மேஜிக் ஷோ மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதுபற்றி ஷோரூம் உரிமையாளர் கூறுகையில், தற்போது வந்துள்ள ஹோண்டா சைன் புதிய மோட்டார் சைக்கிள் 100 சி.சி. திறன் கொண்டது. அதிக அளவில் மைலேஜ் கொடுக்கும். பார்ப்பதற்கு அழகான அற்புதமான மாடலில் உள்ளது . மனதை மயக்கும் சிறந்த வசதிகள் மற்ற நிறுவன வண்டிகளுடன் ஒப்பிடும் போது நம்ப முடியாத அளவில் விலை குறைவு. அதிக தூரம் பயணம் செய்யும் வசதி உள்ளது. அறிமுக சலுகையாக குறைந்த முன்பணம், எக்ஸ்சேஞ்ச் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பு சலுகைகளாக நடைமுறை கட்டணம் இல்லை. முன் தவணை பணம் தேவையில்லை. ஆவண பதிவு கட்டணம் கிடையாது. இந்த சலுகை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள், ஹோண்டா சைன் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்பெறலாம், கரூர்-கோவை ரோட்டில் உள்ள சக்ரா ஹோண்டா ஷோரூமில் ஹோண்டா சைனின் புதிய மோட்டார் சைக்கிள் விற்பனைக்காக வந்துள்ளது என்றார்.

விழாவிற்கு வந்தவர்களை ஷோரூம் விற்பனை மேலாளர் வரவேற்றார். விழாவில், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், மெக்கானிக் உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story