தேனியில் பராமரிப்பு இல்லாததால்குண்டும், குழியுமாக மாறிய சாலைகள்நகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?


தேனியில் பராமரிப்பு இல்லாததால்குண்டும், குழியுமாக மாறிய சாலைகள்நகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் பராமரிப்பு இல்லாததால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.

தேனி

சேதம் அடைந்த சாலை

தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. மாவட்டத்தின் தலைநகர் என்ற போதிலும், இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் சாலைகளின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. குடியிருப்பு பகுதிகளின் பிரதான சாலைகளில் ஒன்றான பாரஸ்ட்ரோடு பகுதியில் பல இடங்களில் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

பாரஸ்ட்ரோடு ரெயில்வே கேட் அருகில் பெரிய அளவில் பள்ளம் உருவாகி உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையால் அங்கு மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இந்த சாலையில் பள்ளி நாட்களில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்த சாலை சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டி களுக்கு மிகுந்த சிரமம் ஏற் படுகிறது. காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

விபத்து அபாயம்

அதுபோல், 20-வது வார்டுக்கு உட்பட்ட தேனி கே.ஆர்.ஆர். நகர் மெயின் ரோடும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அங்கு சில மாதங்களுக்கு முன்பு சிறிய அளவில் சேதம் அடைந்து இருந்தது. அதை சீரமைக்காததால் நாளடைவில் பெரிய பள்ளமாக உருவாகி வாகன ஓட்டிகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

நகர் பகுதியில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகள் சேதம் அடைந்து பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, சேதம் அடைந்த சாலைகளை ஆரம்ப நிலையிலேயே சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது சேதம் அடைந்து விபத்துகளை உருவாக்கும் வகையில் உருக்குலைந்து கிடக்கும் சாலைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்குமா? என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story