அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவையொட்டி மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தி.மு.க. அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்திலிருந்து மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். பின்னர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகரசபை தலைவர் செல்வராஜ், நகரசபை துணைத்தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மயிலாடுதுறை அருகே சித்தர்க்காட்டில் உள்ள அண்ணாசிலைக்கு, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் மூவலூர்மூர்த்தி மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
மயிலாடுதுறையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, சக்தி, நகர செயலாளர் செந்தமிழன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், ஒன்றிய குழு துணைத் தலைவர் மகேஸ்வரிமுருகவேல் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருவெண்காடு
திருவெண்காட்டில் உள்ள அண்ணா சிலைக்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ராம இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர் கலந்துகொண்டு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ரவி, உதயராணி உத்திரமூர்த்தி, கோபி, தமிழரசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி வக்கீல் பழனிவேல், வக்கீல் வினோத், இளைஞரணி துணை அமைப்பாளர் தினகரன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
குத்தாலம்
குத்தாலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு குத்தாலம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமகளூர் ராஜா, குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் குத்தாலம் ஒன்றியக்குழு துணை தலைவர் முருகப்பா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் குத்தாலம் கடைவீதியில் பேரூர் செயலாளர் சம்சுதீன் தலைமையில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன், குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு கடைவீதியில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.