கவுரவ விரிவுரையாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


கவுரவ விரிவுரையாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அரசாணை 56-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும். யு.ஜி.சி. நிர்ணயித்த ரூ.50 ஆயிரம் ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும்.

கவுரவ விரிவுரையாளர்களின் பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

மாநிலத் தகுதித்தேர்வு (எஸ்.இ.டி.) உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story